25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையம் நகராட்சி மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டிகளில்  சமூக விரோத செயல்கள்.  சி.சி.டி.வி., பொருத்தி கண்காணித்துகட்டுப்படுத்த வேண்டும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் நகராட்சி மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டிகளில்  சமூக விரோத செயல்கள்.  சி.சி.டி.வி., பொருத்தி கண்காணித்துகட்டுப்படுத்த வேண்டும்

ராஜபாளையம் சம்பந்தபுரம், டி.பி மில்ஸ் ரோடு, மலையடிப்பட்டி பகுதிகளில் ஏற்கனவே மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அருகே கஞ்சா இளைஞர்கள் நடமாட்டம், மது அருந்துதல், தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி குளியல் போன்றசெயல்கள் நடந்துள்ளது.

ராஜபாளையம் நகராட்சி குடிநீருக்காக அய்யனார் ஆற்றில் இருந்து தண்ணீரை தேக்கி சுத்திகரிப்பு குழாய் மூலம் நகர் பகுதியில் அமைந்துள்ள 6 மேல்நிலை குடிநீர் தொட் டிகளில் சேமித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி புதிதாக 10 மேல்நிலை தொட்டிகள் அமைக்கப் பட்டு விநியோகம் நடக்கிறது. குடிநீர் தொட்டி சுற்றி உள்ள இடங்களில் இளைஞர்கள், சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்துவருகிறது. 

இது போன்ற பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் ராஜபாளையம் மேல்குடிநீர் தொட்டிகளில் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளபடி கண்காணிப்பு கேமரா அமைத்து சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News